Anbudan Miththiran Works

ANBUDAN MITHTHIRAN

இங்கே கதை, கவிதை, கட்டுரை முதலியவற்றை ஆடியோ வடிவில் தொகுத்து வழங்க உள்ளேன். அது மட்டும் இல்லாமல் எனது புத்தகங்களையும் ஆடியோ வடிவில் இங்கு தொகுத்து வழங்க உள்ளேன். தொடர்ந்து கேட்டு உங்கள் நல்ல ஆதரவு எனக்கு வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். read less
社会・文化社会・文化
哲学哲学

エピソード

கோபத்தின் சாபம் (The Curse of Anger) - கவிதை
09-11-2023
கோபத்தின் சாபம் (The Curse of Anger) - கவிதை
இந்த கடுமையான கவிதை கோபத்தின் அழிவு சக்தியை பிரதிபலிக்கிறது, கட்டுப்படுத்தப்படாத கோபம் எவ்வாறு தனிப்பட்ட, சமூக மற்றும் உலகளாவிய அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை ஆராய்கிறது. பகையை வளர்ப்பது முதல் வருங்கால சந்ததியினரை ஆபத்தில் ஆழ்த்துவது வரை கோபம் என்னும் அருவியில் இருந்து கொட்டும் விளைவுகளை இது வலியுறுத்துகிறது. கோபம் தனிநபர்கள், குடும்பங்கள், நாடுகள் மற்றும் உலகம் முழுவதும் கட்டவிழ்த்துவிடக்கூடிய பரவலான பேரழிவுக்கு எதிராக ஒரு முக்கியமான பாதுகாப்பாக சுயக் கட்டுப்பாட்டை வலியுறுத்துகிறார் கவிஞர். #anbumiththiran #தமிழ்க்கவிதை #kavithai #kavithaigal #kavithaikal #kavithaitamil #sinthanai #sinthanaikal #tamilkavithai #tamilkavithaigal #tamilkavithaikal #தமிழ்க்கவிதை #கோபம் #tamilthoughts #tamilpoem #tamilpoetry #tamilpoems
பிஸ்கெட்ஸ் மற்றும் நாய்கள் : அரசியல் மற்றும் ஞானத்தின் கதை
08-11-2023
பிஸ்கெட்ஸ் மற்றும் நாய்கள் : அரசியல் மற்றும் ஞானத்தின் கதை
It is a realistic story that explores political corruption and the importance of knowledge, virtue and good thinking. This is a story told by Thiago who is disappointed with the current political situation and the lack of awareness among the people. He tells his friend the story of a farmer, his five dogs and six thieves trying to steal his mangoes. The story illustrates that thieves easily bribe four dogs with biscuits, while one dog remains faithful and vigilant. The story shows the consequences of the dogs' actions and the moral lesson the martyr wants to convey. The story is an allegory of the condition of the nation and the people, how they are manipulated by politicians who give them false promises and incentives. The story calls upon the reader to think critically and rationally and to choose leaders of knowledge, virtue and good thinking. அரசியல் ஊழல் மற்றும் அறிவு, நல்லொழுக்கம் மற்றும் நல்ல சிந்தனை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஆராயும் யதார்த்தக் கதை இது. தற்போதைய அரசியல் நிலை மற்றும் மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஏமாற்றமடைந்த தியாகுவால் சொல்லப்படுகிற கதை இது. அவர் தனது நண்பரிடம் ஒரு விவசாயி, அவரது ஐந்து நாய்கள் மற்றும் ஆறு திருடர்கள் அவரது மாம்பழங்களைத் திருட முயற்சிக்கும் கதையைச் சொல்கிறார். நான்கு நாய்களுக்கு பிஸ்கட் மூலம் திருடர்கள் எளிதாக லஞ்சம் கொடுக்கிறார்கள், அதே நேரத்தில் ஒரு நாய் உண்மையாகவும் விழிப்புடனும் இருக்கிறது என்பதை கதை விளக்குகிறது. நாய்களின் செயல்களின் விளைவுகளையும், தியாகு சொல்ல விரும்பும் தார்மீக பாடத்தையும் கதை காட்டுகிறது. தேசம் மற்றும் மக்களின் நிலைமை, அவர்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் மற்றும் ஊக்குவிப்புகளை வழங்கும் அரசியல்வாதிகளால் அவர்கள் எவ்வாறு கையாளப்படுகிறார்கள் என்பதற்கான உருவகமே இந்த கதை. விமர்சன ரீதியாகவும் பகுத்தறிவு ரீதியாகவும் சிந்திக்கவும், அறிவும், நல்லொழுக்கமும், நல்ல சிந்தனையும் கொண்ட தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவும் கதை வாசகனுக்கு அறைகூவல் விடுகிறது. #anbumiththiran #தமிழ் #Tamil #tamilkathai #கதை #கதைகள் #தமிழ்கதை #தமிழ்க்கதை #tamilkathaigal #tamilthoughts #tamilphilosophy #kathaipesalam #kathaikal #kathai #kathaikelu #arasiyaltoday #arasiyal #tamilpolitics
தீராத கவலைகள் (Endless Worries)
03-08-2023
தீராத கவலைகள் (Endless Worries)
தீராத கவலைகள்... ஒருவர் கவலையற்ற வாழ்க்கைக்காக ஏங்குகிறார், ஆனால், பணம் தேவைப்படும் உணவு, உடை மற்றும் தங்குமிடம் போன்ற அடிப்படைத் தேவைகளை ஒப்புக்கொள்கிறார். தொடர்ச்சியான நேர்மறை சிந்தனையும், மனநிறைவும் பெரும் கவலைகளைக் கடந்து நிவாரணம் பெற உதவும் என்று அவர்கள் நம்புகிறார். அவர் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும், வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களையும் வலியுறுத்துகிறார். முதுமையில், சிறு வியாதிகள் இருந்தாலும், மரணத்திற்கு வழிவகுக்கும் நோய்களுக்கான செலவுகள்தான் பெரும் கவலையாக இருக்கிறது. ஆக, கவலைகள் தீருவதில்லை. #AnbuMiththiran #tamilkavithai #tamilkavithaikal #tamilkavithaigal #kavithai #kavithaitamil #kavithaikal #kavithaigal #tamilthoughts #tamilthought #tamilpoetry #tamilpoem #TamilPoems #tamillifequotes #tamillife #tamillines #tamilpoetrylines #tamilpoets #tamilpoet #tamil #sinthanai #sinthanaikal #தமிழ் #தமிழ்க்கவிதை #தமிழ்க்கவிதைகள் #கவிதைகள் #கவிதை #கவிதைதமிழ் #சிந்தனை #சிந்தனைகள்
இரக்கம் என்னும் தீயில் வேகுது மனமே!
23-06-2023
இரக்கம் என்னும் தீயில் வேகுது மனமே!
இரக்கமென்னும் தீயில் வேகுது மனமே! மாலை மங்கி இருள் சூழ்ந்த நேரம், பறவைகள் யாவும் தங்கள் கூட்டை நோக்கி சிறகடிக்கும், நான் மட்டும் ஏனோ வீட்டிலிருந்து விட்டில் பூச்சியாய் பறக்கிறேன் சிந்தனை சிறகை விரித்து. தஞ்சமென்று வந்தவரை தயங்காமல் தாக்கும், மூச்சைப் போக்கும், அநர்த்தமான மனநிலை எங்கிருந்து என்னுள்ளே வந்தது? கோடிக்கணக்கில் மனிதர்கள் சூழ்ந்த சமூகம் மீது வெறுப்பு பிறந்ததும் ஏனோ? வாழ வழியில்லை என்று கையேந்துபவர்களுக்கு தன்னிடம் இருப்பதை தயங்காமல் அளித்த கைகள் இப்போது அளிக்க மறுப்பதேனோ? எத்தனை முறை பிச்சை இடுவது என்றே கலங்கி மனம் எரிச்சலடைவதும் ஏனோ? உடல் உழைப்பின்றி பிச்சை எடுப்பாரைக் கண்டால் சற்று கோபம் ஏற்பட்டாலும், " அண்ணா! தம்பி! ",என்று அழைத்தவர்களுக்கு எதையாவது அளிக்க வேண்டுமென்றே தோன்றுகிறது. கையிலிந்த பத்து ரூபாயையும் கொடுத்துவிட்டு பேரூந்தில் செல்ல பணமின்றி நடந்து சென்ற அனுபவமும் எனக்கு ஏற்பட்டது. அளவுக்கு அதிகமாக வரவு வந்தால் அள்ளிக் கொடுக்கலாம். இரக்கத்தை மட்டும் அளவுக்கு அதிகமாக கொடுத்து, செல்வத்தையெல்லாம் தூர வைத்து உள்ளத்தை மட்டும் உருக வைத்தது ஏனோ? எழுதியவர்:- அன்புடன் மித்திரன் #AnbuMiththiran #tamilthoughts #tamilkavithaigal #tamilkavithaigal #tamilkavithai #kavithaitamil #Kavithai #kavithaikal #kavithaigal #tamilpoems #tamilpoem #tamilpoetry #tamilshortpoems #tamilthought #tamilshorts #tamilnarration #tamil #tamilquotes #tamilpoet #tamilbooks #tamilbook #தமிழ் #தமிழ்க்கவிதைகள் #தமிழ்க்கவிதை #கவிதைகள் #கவிதை #sinthanai #sinthanaikal #சிந்தனை #சிந்தனைகள்
தனிமை என்பது கொடுமையானதா?
12-01-2023
தனிமை என்பது கொடுமையானதா?
தனிமை! " இனிது இனிது ஏகாந்தம் இனிது ",என்று சொன்ன ஔவையின் வாக்கு பொய்த்ததோ? தனிமையின் கொடுமையால் தற்கொலை என்று தலைப்பு செய்தியும் வந்து தகராறு செய்கிறதே! மனிதர்களும் அவ்வளவு பலவீனமானவர்களா? தனிமை வெறுமைதான். வெறுமை உணராவிடில் உண்மை எங்கே புரியும்? கூடி வாழும் மனிதக் கூட்டத்தில் தனிமை கொடுமை என்றால் என்றோ நான் மரித்திருக்க வேண்டுமே! பொழுதுபோக்கு கூடலில் நேரம் போகவில்லை என்று பழகும் மனிதர்களைவிட தனிமை கொடுமையானது அல்ல. நேரத்திற்கு நேரம் மாறுவார்கள் இவர்கள். தனிமையோ எப்போதும் அடைக்கலம் தரும் தியானக்கூடம். தனிமையை சுவைக்க தனிமையோடு சற்று உரையாடல் வேண்டும். எனது தனிமை இயற்கையோடு எனக்குள்ள தொடர்பை மேம்படுத்தவே உதவியாக உள்ளதென்பேன். தனிமை கொடுமையெனில் அது உங்கள் பலவீனம். வைராக்கியமின்மையின் அடையாளம். தேவையற்ற வார்த்தைகளால் பிறர் மனம் புண்பட பேசி இன்பம் காண்பதை விட இனிமையானது இந்த தனிமை. நம்மை நாமே தயார் செய்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு இந்த தனிமை. தனிமை உணராவிடில் வாழ்வதும் கடினம். எல்லா சூழ்நிலைகளிலும் எல்லாரும் நம்முடன் இருக்க மாட்டார்கள். ஆதலால் பழகிச் சொல்கிறேன் தனிமை போல் இனிமை வேறெதிலும் இல்லை. - அன்புடன் மித்திரன் ( ‎@anbudanmiththiranworks  ) #anbumiththiran #தமிழ் #தமிழ்க்கவிதைகள் #kavithai #kavithaigal #kavithaikal #tamilkavithai #tamilkavithaigal #tamilpoetry #tamilshorts #தமிழ்க்கவிதை #tamilkavithaikal #tamil #tamilpoem #tamilpoems #tamilnarration #tamilwriter #tamilthoughts #கவிதை #கவிதைகள் #சிந்தனை #சிந்தனைகள் #kavithaistatus
உலகச் சிந்தனை| கவர்ச்சியால் கவிழும் உள்ளங்கள்
10-01-2023
உலகச் சிந்தனை| கவர்ச்சியால் கவிழும் உள்ளங்கள்
உலகச் சிந்தனை! இந்த உலகைப் பற்றி என்ன தெரியும் உனக்கு? எதை எடுத்தாலும் கவர்ச்சி தேடும் உலகம் இது. படத்தை பார்த்தாலும் கவர்ச்சி? செய்தி தலைப்பைப் பார்த்தாலும் கவர்ச்சி? ஆடையிலும், முகப்பாவனையிலும் எதிர்பார்க்கப்படும் கவர்ச்சி? உங்களை நினைத்து உங்களுக்கு வரவில்லையா குற்ற உணர்ச்சி? அட போடா டேய்! தெரியும். உண்மையை சிந்தித்தால் புரியும். விளம்பரக் கவர்ச்சியில் விற்பனையாகிறது வியாதிகளெல்லாம். வாங்கி ஊத்திக்கோ! தின்ன சோறு செரிக்க ஒரு மருந்து. செரிக்கப்பட்ட உணவு வெளியேற ஒரு மருந்து, வெறியேறி மீண்டும் வயிறு பசிக்க ஒரு மருந்து, எப்படி டேய்! எப்போ பார்த்தாலும் மருந்துகளோட தான் விருந்து. அட போடா டேய்! தெரியும். உண்மையை சிந்தித்தால் புரியும். பலவீனமானது உடம்பு, மேலும் பலவீனமானது இந்த உடம்பு, ஓட முடியல! ஓடுபவனைக் கண்டு வியந்து பார்க்கிறாய். நடக்க முடியல! நடப்பவனை அதிசயமாகக் காண்கிறாய். சைக்கிள் மிதிக்க முடியல! சைக்கிள் மிதிப்பதைப் பெரும் சாதனை என்கிறாய். மூளையின் பலத்தால் குறுக்கு வழி தேடுகிறாய். ஆனாலே உடலாலே இயலாமையில் வீழ்ந்துகிடக்கிறாய். அட போடா டேய்! தெரியும். உண்மையை சிந்தித்தால் புரியும். #anbumiththiran #தமிழ் #தமிழ்க்கவிதைகள் #kavithai #kavithaigal #kavithaikal #tamilkavithai #tamilkavithaigal #tamilkavithaikal #tamilnarration #தமிழ்க்கவிதை #tamilpoem #tamilpoems #tamilpoetry #கவிதை #கவிதைகள் #tamilvoice #tamil #சிந்தனை #சிந்தனைகள் #கவிதைகள்தமிழ் #கவிதைதமிழ் #கவிதைவரிகள் #tamilwriter